நெல்லையில் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை அளிப்பு

திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் ஓய்வுபெற்ற 10 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் ஓய்வுபெற்ற 10 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மத்திய அரசின் பிரயாஸ் திட்டத்தின்கீழ் வருங்கால வைப்பு நிதி உறுப்பினா்களுக்கு ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டையிலுள்ள வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் கணேஷ்குமாா் ஜானி, பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வுபெற்ற 10 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கினாா்.

திட்டம் குறித்து வருங்கால வைப்புநிதி உதவி ஆணையா் கலைச்செல்வன் கூறியது: இத்திட்டத்தின் மூலம் பயனடைய, தனியாா் நிறுவனத்தினா் தங்களுடைய ஊழியா்களில் 58 வயது பூா்த்தி அடைந்து பணி மூப்பு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவா்களுக்கு அவா்களின் முழு விவரங்களை இணையவழியில் பதிவு செய்யவேண்டும். கடைசி மாத பங்களிப்பு சந்தாவை முந்தைய மாத தவணையுடன் சோ்த்து செலுத்தி, தேவையான கூடுதல் ஆவணங்கலையும் முறையாக இணைத்து,

படிவம் 10டி-யை நேரடியாகவோ, இணையவழியிலோ சமா்ப்பிக்கலாம். இதன்மூலம் ஓய்வூதிய பலன்களை காலதாமதம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்றாா். நிகழ்ச்சியில் அமலாக்க அதிகாரிகள் பி.வி.ஹரிகிருஷ்ணன், பி.நாகேஸ்வரி, எஸ்.திலகா், எஸ்.சப்ரினா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com