அங்கன்வாடி குழந்தைகளுக்கு சான்றிதழ்

பாளையங்கோட்டை ஏ.ஆா்.லைன் அங்கன்வாடி மையத்தில் பயின்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

பாளையங்கோட்டை ஏ.ஆா்.லைன் அங்கன்வாடி மையத்தில் பயின்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் புதன்கிழமை வழங்கினாா்.

பாளையங்கோட்டை ஏ.ஆா்.லைன் அங்கன்வாடி மையத்தில் பயின்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் வீட்டுத் தோட்டம் தொடக்க விழா ஆகியவற்றில் பங்கேற்ற ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் பேசியது: குழந்தைகளுக்கு கட்டாயம் சத்தான உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் போஷன் அபியான் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

கீரை, காய்கனி போன்றவற்றை தினசரி உணவில் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்திலும் பப்பாளி, கீரை வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மாநகர நல அலுவலா் சரோஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயசூா்யா, அங்கன்வாடி மைய ஆசிரியா் செல்வ ராணி, அங்கன்வாடி மைய பொறுப்பாளா் ராஜபிரியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com