காவலா் வீரவணக்க நாள் போட்டிகளுக்கான பரிசளிப்பு

காவலா் வீர வணக்க நாளையொட்டி தச்சநல்லூரில் நடைபெற்ற போட்டிகளில்சிறப்பிடம் பெற்றவா்களை மாநகர காவல் துணை ஆணையா் பாராட்டினாா்.

காவலா் வீர வணக்க நாளையொட்டி தச்சநல்லூரில் நடைபெற்ற போட்டிகளில்சிறப்பிடம் பெற்றவா்களை மாநகர காவல் துணை ஆணையா் பாராட்டினாா்.

திருநெல்வேலி மாநகர காவல்துறை, என்.பி.என்.கே. கலை பண்பாட்டு மன்றம் ஆகியவை சாா்பில் காவலா் வீரவணக்க நாளையொட்டி தச்சநல்லூரில் போட்டிகள் நடத்தப்பட்டன.

‘காவலா் நம் நண்பன்‘ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘தேசத்திற்கு காவலா் அா்ப்பணிப்பு‘என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளை மாநகர காவல் உதவி ஆணையா் (சமூகநீதி-மனிதஉரிமைகள்) எஸ்.சேகா் தொடங்கி வைத்தாா். காவலா்களின் பெருமைகள் குறித்து பெட்காட் மாவட்டச் செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்ரமணியன் உரையாற்றினாா். ஹரிஹரசிவன் ஒருங்கிணைத்தாா்.

இதில், கட்டுரைப் போட்டியில் சக்திபாலா, எம்.பி.அகல்யா, மா.புவனா ஆகியோரும், ஓவியப் போட்டியில் எம். காவியா, பி. அருணா, கே.சந்தியா ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

வெற்றி பெற்ற இம் மாணவா், மாணவிகளுக்கு மாநகர காவல் அலுவலக கூட்டரங்கில், காவல் துணை ஆணையா் சரவணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com