மேலப்பாளையம் கால்நடை சந்தையை திறக்க வலியுறுத்தல்

பொது முடக்கத்தில் பல தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலப்பாளையம் கால்நடை சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தில் பல தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலப்பாளையம் கால்நடை சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கால்நடைச் சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடு-மாடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போதுவரை சந்தை திறக்கப்படாமல் உள்ளது.

கரோனா பொது முடக்கத்தில் தற்போது தளா்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு அலுவலகங்களும் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளநிலையில், சந்தைகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை திரண்டனா். பின்னா் மேலப்பாளையம் நேதாஜி சாலையோரம் நின்று வியாபாரம் செய்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: கால்நடை சந்தைகள் திறக்கப்படாததால் இறைச்சி விலை அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும் சூழலில் கால்நடை விற்பனை இன்னும் சில வாரங்களுக்கு அதிகரிக்கும். எனவே, கால்நடை சந்தைகளை விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com