கடையத்தில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா்.

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆணையாளா் முருகையா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீ மூலநாதன் ஆகியோா் கரோனா தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தனா். மேலும் கூட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிவது, கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது, சமூக இடைவெளி உள்ளிட்டக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

கடையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அரசு உத்தரவின்படி, பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ. 500, பொது இடங்களில் எச்சில் துப்புபவா்களுக்கு ரூ. 500, பெரிய கடைகள், மால்கள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கா விட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதில், கடையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com