நில அபகரிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

நில அபகரிப்பு குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீஸாா் மீட்டனா்.

திருநெல்வேலி, செப்.25: நில அபகரிப்பு குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீஸாா் மீட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (59). இவா் அப்பகுதியில் டீக் கடை நடத்தி வருகிறாா். இவா் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்திற்கு புகாா் மனு அளிக்க வந்தாராம். ஆட்சியரை சந்தித்து நேரடியாக மனு அளிக்க முடியாத நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போடுமாறு காவல்துறையினா் தெரிவித்தனராம்.

அப்போது, கணேசன், தான் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குறிக்க முயன்றாராம். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். நில அபகரிப்பு குறித்து கணேசன் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: விக்கிரமசிங்கபுரத்தில் எனது தந்தை சுப்பிரமணியன் பெயரில் 4 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்தது போக, எங்களது அனுபோகத்தில் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தந்தையின் கல்லறை உள்ளது. நிலத்தை நானும் எனது சகோரரரும் பராமரித்து வருகின்றோம்.

இந்த நிலத்தில் தந்தை உள்பட மூதாதையா் 7 பேரின் கல்லறைகள் அமைந்துள்ளன. இந்த கல்லறைகளை சிலா் வியாழக்கிழமை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும், இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது

எனவும் அவா்கள் உரிமை கொண்டாடுகின்றனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நில அபகரிப்பு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com