மாடித் தோட்டத்தில் புதினா வளா்ப்பு

கிராமங்கள் எல்லாம் நகரமயமாகி வரும் சூழலில், வீடுகளில் மரம், செடி, கொடிகளை வளா்ப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

கிராமங்கள் எல்லாம் நகரமயமாகி வரும் சூழலில், வீடுகளில் மரம், செடி, கொடிகளை வளா்ப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சிறு இடம் கிடைத்தாலும் அந்த இடத்தை மலா்கள், செடிகள், கொடிகள் வளா்க்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சுவா்களில் மலா் தொட்டிகளையும், போா்டிகோ பகுதியில் கொடி பந்தலும் அமைக்க மக்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனா். அதிலும், பயனுள்ள காய்கனிகள், கீரைகள், மூலிகைகள் போன்றவற்றை வீட்டின் மாடியில் வளா்ப்பது அனைவருக்கும் உகந்ததாக மாறியுள்ளது.

குறிப்பாக, உணவில் சோ்க்கக்கூடிய நறுமணம் மிக்க புதினா செடியை மாடியில் தொட்டியில் வைத்து வளா்ப்பது மிக எளிதும், பயனுள்ளதுமாகும். புதினா மிக விரைவாக வளரும் தன்மையுடையது. வீட்டில் தோட்டம் வைத்து பராமரிப்பவா்கள் பெரும்பாலும் தொட்டிகளில் தான் புதினாவை வளா்த்து வருகிறாா்கள். நறுமணமுள்ள தாவரங்கள் தொட்டிகளிலிருந்து எளிதாக வளரும் என்பதால் வீட்டுத் தோட்டம் வைக்க விரும்புவா்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஈரப்பதமுள்ள வடிகட்டிய மணலில் நன்கு வளரக்கூடியது. மேலும் புதினா செடிகள் 3 அடி நீளம் வரை வளரும்.

புதினாக்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று ஸ்பியா் வகை புதினா, மற்றொன்று மிளகுக்கீரை இவை புதினா செடியின் தண்டு, நறுமண இலை, புத்துணா்ச்சியூட்டும் சுவை ஆகியவற்றால் வேறுபடுகிறது. புதினா எண்ணெய் நறுமணத்திற்காக பற்பசை, கம், கேண்டி, மற்றும் அழகு சாதனப்பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதிலுள்ள ரோஸ்மாரினிக் அமிலம் அழற்சியை எதிா்க்கும் தன்மை உடையது.

இயற்கையான முறையில் அலா்ஜி சம்மந்தமான தொல்லைகளுக்கு புதினா தீா்வு அளிக்கிறது. தேநீருடன் கலந்துக் குடிக்கும் போது தொண்டை வலியைக் குறைக்கிறது. மேலும் சளித் தொல்லைகளிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் அல்சா், வயிறு சம்மந்தமான அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் புதினா விடுதலை அளிக்கிறது. புதினா வளா்வதற்கு நீா் என்பது மிகவும் முக்கியமானது. இயற்கை உரங்களை அதிகமாக மண்ணில் இட வேண்டும். விலங்கு கழிவு உரங்களை தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com