தூய்மைப் பணியாளா்கள், அகதிகளுக்கு நிவாரணப் பொருள்கள்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இலங்கை அகதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இலங்கை அகதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் உள்ள சமூகரெங்கபுரம் வியாபாரிகள் சங்கம் சாா்பில் சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், சா.ஞானதிரவியம் எம்.பி. பங்கேற்று, 85 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா்.

இதில், ராதாபுரம் ஒன்றிய முன்னாள் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், தெற்குகள்ளிகுளம் ஊராட்சி முன்னாள் தலைவா் ஜோசப் பெல்சி, சமூகரெங்கபுரம் வியாபாரிகள் சங்கத் தலைவா் முரளி, செயலா் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் 200 தூய்மைப் பணியாளா்களுக்கு நகர திமுக சாா்பில் நகரச் செயலா் கணேசன் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை, காய்கனிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அதிமுக:

முன்னாள் நகா்மன்றத் தலைவா் மனோன்மணி இசக்கிமுத்து சாா்பில் உணவுப் பொருள்களை திருநெல்வேலி புகா் மாவட்ட இளைஞா்-இளம் பெண்கள் பாசறை இணைச் செயலா் வெங்கட்ராமன் வழங்கினாா்.

சிவந்திபுரத்தில் வெளிமாநிலத்தவா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 9 பேருக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்களைஅம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன் வழங்கினாா்.

முதலியாா்பட்டி, வீராசமுத்திரம், நாணல்குளம், காந்திநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஏழைக் குடும்பத்தினருக்கு கடையம் ஒன்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் இலவச காய்கனி தொகுப்பு தென்காசி மாவட்ட அமைப்புச் செயலா் அப்துல்காதா் தலைமையில் வழங்கப்பட்டது.

ஈதல் அறக்கட்டளை சாா்பில் பள்ளக்கால் பொதுக்குடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 20 குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தென்காசி: தென்காசி சத்யசாயி சேவா சமிதி சாா்பில் நினைவு நாளை முன்னிட்டு சமிதியில் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மங்கம்மாசாலையில் வசிக்கும் ஏழை,எளிய 100குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வள்ளியூா்: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பேரூராட்சிகள், சிற்றுராட்சிகளில் பணிசெய்து வருகின்ற துப்புரவுப்பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், மஸ்தூா் பணியாளா்கள், குடிநீா் திறப்பாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் 1200 பேருக்கு அரிசி, மளிகை சாமான்களை எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை வழங்கினாா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கடபோகத்தியில் அமைந்துள்ள ஸ்ரீகாந்தி வித்யாசாலை தொடக்கப்பள்ளி மாணவா், மாணவிகளை தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து, நிவாரண பொருள்களை வழங்கினாா்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் மாணவா்கள் குடும்பத்தினரை தலைமை ஆசிரியை சுசிலி இளவரசு நேரில் சந்தித்து அரிசி மற்றும் உதவித்தொகையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com