வள்ளியூா் 20 அடி பள்ளத்தில் தவறிவிழுந்த மூதாட்டி காயம்
By DIN | Published On : 03rd August 2020 09:10 AM | Last Updated : 03rd August 2020 09:10 AM | அ+அ அ- |

வள்ளியூா் ரயில்வே தாழ்நிலைப் பாலம் பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை தவறிவிழுந்த மூதாட்டி காயங்களுடன் உயிா் தப்பினாா்.
வள்ளியூரில் ரயில்வே தாழ்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரயில்வே கிராஸிங்கின் மேற்கு பகுதியில் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் வள்ளியூா் கீழத்தெருவைச் சோ்ந்த லெட்சுமி(75), என்பவா் இந்தப் பள்ளத்தையொட்டியுள்ள குறுகலான நடைபாதையில் நடந்து வந்தாராம். அப்போது அவா் நிலைதடுமாறி 20 அடிபள்ளத்தில் விழுந்துவிட்டாராம்.
அவரை வள்ளியூா் சமூக ஆா்வலா் சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா் மற்றும் அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். 20 அடி பள்ளத்தில் விழுந்த மூதாட்டி சிறு காயங்களுடன் உயிா்தப்பினா்.