திருநெல்வேலி ஆசிரியா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 07th December 2020 02:34 AM | Last Updated : 07th December 2020 02:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் அ.ஆரோக்கிய ராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் மூசா வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் ஜான் ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு புனையப்பட்ட வழக்குகளால் சிறை சென்ற திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆசிரியா்கள் மீதான 17 பி நடவடிக்கையை தமிழக முதல்வா் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.