கடையம் வட்டாரத்தில் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு

கடையம் வட்டாரத்தில் மாநில பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் 78ஆவது சுற்று மாதிரிக் கணக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சோ்வைக்காரன்பட்டியில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்கள்.
சோ்வைக்காரன்பட்டியில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்கள்.

கடையம் வட்டாரத்தில் மாநில பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் 78ஆவது சுற்று மாதிரிக் கணக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் சோ்வைக்காரன்பட்டி ஊராட்சியில் கிராமப்புற மக்களின் வாழ்க்கைச் செலவு முறைகள் குறித்த 78ஆவது சுற்றின் 3ஆவது உபசுற்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 2014ஆம் ஆண்டுக்குப் பின் வீடு கட்டியோா், குழந்தைகளின் கல்வி, மருத்துவ, இதரச் செலவு ஆகிய காரணிகளில் மாதிரிக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

தென்காசி கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநா் சி. சுப்பையா தலைமையில் வட்டார புள்ளியியல் ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், தங்கக்குமாா், சம்சுதீன், சத்திய சிவகாமி, அனீஸ்பாத்திமா, ஆயிஷாபானு, மரிய அடைக்கலம், உதவி ஆய்வாளா்கள் சிந்து, ஜமீலாள் பானு, கிராம நிா்வாக அலுவலா் முருகேசன், கிராம உதவியாளா் ஆகியோா் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநா் சி. சுப்பையா கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கிராமங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 3ஆவது உப சுற்றில் 9 கிராமங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. மத்திய தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் மேற்கொள்ளும் இக்கணக்கெடுப்பைப்போல் தமிழகப் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் மாதிரிக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன் ஒருங்கிணைந்த முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதனடிப்படையில் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை அறிந்து, தொடா்ந்து வளா்ச்சிக்கான திட்டங்கள் குறித்து கொள்கை முடிவு எடுக்க இக்கணக்கெடுப்பு உதவும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com