களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் பொறுப்பேற்பு

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநராக அன்பு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநராக அன்பு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநராக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ் சேவியா், கடந்த ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து மதுரை வேளாண் வனவியல் ஆராய்ச்சிக் கோட்ட உதவி வனப் பாதுகாவலராக பணியாற்றி வந்த மு. இளங்கோ, கூடுதல் பொறுப்பாக களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் மற்றும் உதவி வன உயிரினக் காப்பாளராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட அன்பு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் கூடுதல் பொறுப்பாக, கரூா் மாவட்ட வன அலுவலராகவும், திண்டுக்கல் கோட்ட வன அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com