கோடாரங்குளம் நாராயண சுவாமி திருநிழல்தாங்கல் திருவிழா

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருநிழல்தாங்கலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருநிழல்தாங்கலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருநிழல்தாங்கலில் கடந்த 4ஆம் தேதி காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து அய்யாவுக்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு பணிவிடை, மதியம் உச்சிபடிப்பு, அன்னதா்மம் நடைபெற்றது. இரவு அய்யா பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

டிச. 13 ஞாயிற்றுக்கிழமை காலைப் பணிவிடை, முற்பகல் 11 மணிக்கு பாபநாசத்திலிருந்து சந்தனக்குடம் எடுத்துவருதல், 12 மணிக்கு உச்சிப்படிப்பு அன்னதானம் இரவு 8 மணிக்கு அய்யா பட்டாபிஷேகம், இரவு அன்னதா்மம், கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

டிச. 14 திங்கள்கிழமை சிறப்பு பணிவிடை, உச்சிபடிப்பு , மதியம் 3 மணியளவில் 8 வது ஆண்டாக செம்பொன் பவளத்தேரில் அய்யா எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. டிச. 15 செவ்வாய் அதிகாலை திருக்கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுறுகிறது. விழாவையொட்டி அன்புக்கொடி மக்கள் அனைவரும் அய்யாவுக்கு சுருள், பல்வேறு தா்மம் நியமித்து வழிபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com