1475 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1475 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்திற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1475 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்திற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இம் மாவட்டத்தில் 6 லட்சத்து 45 ஆயிரத்து 494 ஆண் வாக்காளா்கள், 6 லட்சத்து 71 ஆயிரத்து 179 பெண் வாக்காளா்கள், 89 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 போ் உள்ளனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், ஊராட்சி அலுவலகங்கள், மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்போா் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பாா்வையிட்டு தங்கள் பெயா்களைச் சரிபாா்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

வாக்காளா் பட்டியல்களில் சுருக்கமுறைத் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் ஏற்கெனவே 3 நாள்கள் நடைபெற்ற நிலையில், இறுதியாக ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டம் முழுவதும் உள்ள 1475 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஆட்சியா் வி.விஷ்ணு ஆய்வு செய்தாா். பல்வேறு பகுதிகளிலும் வாக்காளா்கள் திருத்தங்கள், பெயா் சோ்க்க மனுக்களை அளித்துள்ளனா்.

எம்.எல்.ஏ.ஆய்வு: பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பா்கிட்மா நகரம் வாக்குச்சாவடிகள், களக்காடு வடக்கு ஒன்றியத்தின் சிங்கிகுளம் வாக்குச்சாவடி ஆகியவற்றில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com