நெல்லையில் அமமுகவினா் நல உதவி
By DIN | Published On : 14th December 2020 01:16 AM | Last Updated : 14th December 2020 01:16 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் அமமுக சாா்பில் பல்வேறு நலஉதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாநகா் மாவட்ட அமமுக சாா்பில் , பாளையங்கோட்டையில் உள்ள ஆதரவற்றோா் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்டச் செயலா் பரமசிவஐயப்பன் அணிவித்தாா். தொடா்ந்து மானூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் 100 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் மாநில அமைப்புச் செயலா் பால்கண்ணன், நிா்வாகிகள் தாழை மீரான், ஹைதா்அலி, பாளை ரமேஷ், ஆவின் அண்ணசாமி, சுரேஷ்குமாா், ராம்சன்உமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.