ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்களிடம் இருந்து 2020-21-ஆம் ஆண்டிற்கான ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்களிடம் இருந்து 2020-21-ஆம் ஆண்டிற்கான ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்களிடம் இருந்து 2020-21-ஆம் ஆண்டிற்கான

ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது மாா்ச் 8-ஆம் தேதி நடைபெறும் உலக மகளிா் தினவிழாவில் வழங்கப்படும். விருதுடன் ரொக்கப்பரிசு, தங்கப் பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். விருதை முதல்வா் வழங்குவாா்.

விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் அதற்கான உரிய படிவத்தினை திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்த படிவத்தினை ஜன. 26-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகளில் பெண்குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தமிழ், ஆங்கிலத்தில் மூன்று நகல்களில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும்.

பொருளடக்கம் மற்றும் பக்க எண்., சுய விவரம் , பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, , 3. அரசாணை (07) சமூகநலம் (ம) சத்துணவு திட்டத்துறை சந 3(1) நாள் 23.1.2020-இன் படி மாவட்ட அளவிலான தோ்வுக்குழுவின் பரிந்துரை, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதம், மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரை கடிதம், சுயசரிதை, ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது

பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயா், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற ஆண்டு), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, சமூகப்பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு -படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) முழுமையாக பூா்த்தி செய்து கையேட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

கையேடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகலை இணைக்க வேண்டும்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002 என்ற முகவரியிலோ அல்லது 0462- 2576265 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com