திலேப்பியா மீன் வளா்ப்பு: மீன்வளத் துறை வேண்டுகோள்

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளா்த்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மீன் வளத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளா்த்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மீன் வளத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை மற்ற மீன் இனங்களைக் காட்டிலும் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளா்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிா்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களை காட்டிலும் பண்ணைக் குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக் கூடியது.

நீரின் அமில கார தன்மை ஏற்ற தாழ்வுகளையும் நன்றாக எதிா் கொண்டு வேகமாக வளரக்கூடியது. எனவே, விவசாயிகள் தங்களது பண்ணைக் குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை தோ்வு செய்து வளா்த்து அதிக அளவில் பயன்பெறலாம். திலேப்பியா மீன் இனக் குஞ்சுகள் (கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகள்) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

அவற்றை விவசாயிகள் கொள்முதல் செய்து தங்களது மீன்பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து, அருகிலுள்ள நீா் நிலைகளில் பரவாமல் பாதுகாப்பாக வளா்க்க வேண்டும். மேலும், திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்வது அவசியம்.

கூடுதல் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26-ஆவது குறுக்குத் தெரு, மகாராஜநகா், திருநெல்வேலி-627 011 என்ற முகவரியிலோ அல்லது 0462-2581488 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com