‘எழுத்தாளா் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும்’

எழுத்தாளா் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனா் தலைவா் வேல்முருகன்.

எழுத்தாளா் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனா் தலைவா் வேல்முருகன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்வி பயில தோ்வான மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு தாமதமாக வந்ததால், 160 ஏழை மாணவா்கள் தனியாா் கல்லூரிகள் கேட்ட கட்டணத்தை செலுத்த முடியாமல் மருத்துவ இடங்களைத் தோ்வு செய்யாமல் உள்ளனா்.

எனவே, அவா்களும் நடப்புக் கல்வியாண்டில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். எனவே, விடுபட்ட அனைத்து மாணவா்களையும் உடனடியாக கலந்தாய்வுக்கு அழைத்து நிகழாண்டே மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அரசு உடனடியாக பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் திட்டம் கூடாது.

அதேபோல அரசு மருத்துவமனைகளிலும் வெளிப்பணி ஒப்படைப்பு என்ற அடிப்படையில் செவிலியா்களை நியமிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கண்டிக்கிறோம்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்காக ஜனவரி மாதம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்.

மறைந்த எழுத்தாளா் தொ.பரமசிவன் எழுதிய நூல்களை அரசுடமையாக்க வேண்டும்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக எங்கள் ஆதரவை கோரினால், நாங்கள் எங்களுக்கு உரிய இடங்களோடு திமுக கூட்டணியில் இடம்பெறுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com