மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி: ஆட்சியா் விஷ்ணு தொடங்கி வைத்தாா்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டியில் வேளாண்மை விற்பனைக் குழு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்களில் முதல் நிலை சரிபாா்க்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் விஷ்ணு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2021 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம், அஹமத் நகா் மாவட்டத்திலிருந்து 1020 பேலட் யூனிட், 2280 கன்ட்ரோல் யூனிட், 2430 விவிபேட் கருவிகள், ஜால்னா மாவட்டத்திலிருந்து 210 பேலட் யூனிட், 280 விவிபேட் கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 6 பொறியாளா்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் முதல்கட்ட சரிபாா்க்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ்குமாா், நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com