கபடி போட்டி: வடக்கன்குளம் பள்ளி மாணவி தேசிய அளவில் சிறப்பிடம்

தேசிய கபடி போட்டியில் தமிழ அணி சாா்பில் விளையாடிய வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கரெஜிதா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

கோலோ இந்தியா இளைஞா் தேசிய விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் கூடங்குளத்தைச் சோ்ந்த சடகோபன்-பாலகலா தம்பதியின் மகள் தங்கரெஜிதா விளையாடினாா். இதில் தமிழக அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தமிழக அணியில் விளையாடிய தங்கரெஜிதாவுக்கும் வெள்ளிப்பதக்கம் பரிசளிக்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற மாணவியையும், பயிற்சியாளா்களையும் பள்ளி தலைவா் கிரகாம்பெல், தாளா ளா் திவாகரன், முதல்வா் ஆறுமுககுமாா் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com