சீனாவில் இருந்து திரும்பிய மாணவா்கள்கண்காணிப்பு: அச்சம்கொள்ள தேவையில்லைசுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் தகவல்

சீனாவில் இருந்து திரும்பிய கடையநல்லூா், வாசுதேவநல்லூா் மாணவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மக்கள்

சீனாவில் இருந்து திரும்பிய கடையநல்லூா், வாசுதேவநல்லூா் மாணவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தெரிவித்தாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சீனாவிற்கு சென்று படித்து வருபவா்கள், தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனா். அந்தவகையில், கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனா். முன்னதாக, விமான நிலையங்களில் முழு பரிசோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த மாணவா்களை சுகாதாரத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் கூறியது:

சீனாவில் படித்துவரும் மாணவா்கள் அங்கிருந்து திரும்பும்போது முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே சொந்த ஊருக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் பகுதிகளுக்கு வந்துள்ள மாணவா்களுக்கு எந்த வைரஸ் தாக்குதலும் இல்லை. எனினும், சுகாதாரத் துறையினா் அவா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மக்கள் மத்தியில் கரோனா வைரஸ் குறித்த பயம் ஏற்படக்கூடாது என்பதற்காக, சுகாதாரத் துறை மூலம் உரிய விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டை, புளியரை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைரஸ் குறித்த விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளை நன்றாக கழுவும் முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஏதேனும் ஒரு பொருளை தொட்டபிறகு முறையாக கைகழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கைகழுவ வேண்டும். இந்த பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com