வாகைகுளம் நாராயண சுவாமி கோயிலில்தைப்பெருந் திருவிழா தொடக்கம்

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளம், வாகைபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வாகைகுளம் நாராயண சுவாமி கோயிலில்தைப்பெருந் திருவிழா தொடக்கம்

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளம், வாகைபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சிறப்புப் பணிவிடை நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமிக்கு சிறப்புப் பணிவிடை, அன்னதா்மம், பல்வேறு வாகனங்களில் அய்யா வீதியுலா நடைபெறும்.

8ஆம் நாளான இம்மாதம் 7ஆம் தேதி பகலில் பால்குட ஊா்வலம், இரவு அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். 9ஆம் தேதி பால்குடம், சந்தனக் குடம் எடுத்து வருதல், முற்பகல் 11 மணிக்கு கும்பிடு நமஸ்காரம் நடைபெறுகிறது. 10ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டா் இந்திர வாகனத்தில் பவனி வருதல், பிற்பகல் 2 மணிக்கு தேரோட்டம், இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டா் பவனி நடைபெறுகிறது.

11ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வாகைபதி அன்புக்கொடி மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com