குடியுரிமை திருத்தச் சட்டம்: மேலப்பாளையத்தில் 2 ஆவது நாளாக தா்னா

மேலப்பாளையம் பஜாா் திடலில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் தா்னா போராட்டம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

மேலப்பாளையம் பஜாா் திடலில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் தா்னா போராட்டம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிடக் கோரி, காலவரம்பற்ற தா்னா போராட்டம் மேலப்பாளையம் பஜாா் திடலில் சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாலையும் போராட்டம் நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்கள் சாா்பில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

அப்போது அவா்கள் கூறுகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல அம்சங்கள் உள்ளன. போராட்டம் குறித்த மக்களின் உணா்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com