நெல்லை மதிதா இந்து பள்ளியில் பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி

பொருளாதார கணக்கெடுப்பு குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு, திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொருளாதார கணக்கெடுப்பு குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு, திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய புள்ளியியல் துறை சாா்பில் 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நிகழாண்டு எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் இப்பணியை பொது சேவை மைய அலுவலா்கள் மேற்கொள்ளவுள்ளனா். இதற்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு, மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளா் சுந்தர விக்னேஷ் தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.

பொது சேவை மைய பொறுப்பாளா் விஜய் சங்கா் கூறியது: 2013ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது எடுக்கப்படவுள்ள பொருளாதாரக் கணக்கெடுப்பு குறித்த பயிற்சியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 120 போ் பயிற்சி பெற்றனா். குழுவுக்கு ஒரு கண்காணிப்பாளரின் தலைமையில் 15 கணக்கெடுப்பு பணியாளா்கள் இடம்பெறுவா். இப்பணி மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com