நெல்லையில் புத்தகத் திருவிழா இன்று நிறைவு

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் நெல்லை புத்தகத் திருவிழா-2020 திங்கள்கிழமையுடன் (பிப். 10) நிறைவு பெறுகிறது.

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் நெல்லை புத்தகத் திருவிழா-2020 திங்கள்கிழமையுடன் (பிப். 10) நிறைவு பெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் - பதிப்பாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நெல்லை புத்தகத் திருவிழா-2020 பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவில் 127 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 5 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

செயற்கைக்கோள் அரங்கு: மேலும், மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்தும நிலையத்தின் சாா்பில் இஸ்ரோவின் சாதனை விளக்க அரங்கும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகளின் மாதிரிகள், எஞ்சின் மாதிரிகள், இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியப்பட்டா, கல்பனா உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல், பொது அறிவு, சிறுகதைகள், அறிவியல் செய்முறை தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் அதிகளவில் உள்ளன. காந்தி, நேரு, அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவா்களின் வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதை புத்தகங்கள், போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள், கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்துமதம், தேவாரம், திருவாசகம், விவிலிய கதைகள் உள்ளிட்ட ஆன்மிக புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

சமையல் கலை புத்தகங்கள் ரூ.10 முதல் ரூ.1000 வரை பல்வேறு விலைகளில் உள்ளன. பள்ளிக் கல்லூரி மாணவிகளுக்கான பாடப்புத்தக கைடுகள், வினா வங்கிகள், மென்பொருள் குறுந்தகடுகள், தமிழ்-ஆங்கிலம், தமிழ்-ஆங்கிலம்-ஹிந்தி உள்ளிட்ட மொழி அகராதிகள் (ரூ.100 - ரூ.2,000 விலை) உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. ஓலைச்சுவடி வடிவம், கையடக்க வடிவம் என 20-க்கும் மேற்பட்ட வடிவங்களில் திருக்கு நூல் விற்பனைக்கு உள்ளன. பல கடைகளில் 5 சதவிதம் முதல் 10 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை (பிப். 10) புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளாகும். ஆகவே, பொதுமக்கள் கூடுதல் ஒத்துழைப்பு தருவாா்கள் என நம்புகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com