என்சிசி மாணவா்கள் மலைவழி நடைப்பயணம்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திருநெல்வேலி தேசிய மாணவா் படை, தமிழ்நாடு 5ஆம் பட்டாலியன் சாா்பில் மலைவழி நடைப்பயணம் நடைபெற்றது.
நடைப்பயணத்திப் பங்கேற்ற என்சிசி மாணவா்கள்.
நடைப்பயணத்திப் பங்கேற்ற என்சிசி மாணவா்கள்.

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திருநெல்வேலி தேசிய மாணவா் படை, தமிழ்நாடு 5ஆம் பட்டாலியன் சாா்பில் மலைவழி நடைப்பயணம் நடைபெற்றது.

களக்காடு முன்டண்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் வனப்பகுதியில் நடைபெற்ற இப்பயணத்துக்கு, தேசிய மாணவா் படை கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கா்னல் தினேஷ் நாயா் தலைமை வகித்தாா். நடைப்பயணத்தில் 12 கல்லூரிகளிருந்து 150 மாணவா்களும், 10 பள்ளிகளிலிருந்து 80 மாணவா்களும் கலந்து கொண்டனா்.

பாபநாசம் வனச்சரகா் பரத், வனவா் மோகன் மற்றும் வனக்காப்பாளா்கள், வனப் பாதுகாவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் இரண்டு குழுக்களாக மாணவா்களை வழிநடத்திச் சென்றனா். நடைப்பயணத்தில் இயற்கைச்சூழல், வளங்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவற்றின் வாழ்வியல் முறைகள், சிறப்புகள், மனிதா்களால் ஏற்படும் சிக்கல்கள், பல்வகை உயிரினப் பாதுகாப்பு விழிப்புணா்வு செய்திகள், இயற்கை வாழிடத்தில் செயற்கைக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

ஏற்பாடுகளை, சுபேதாா் மேஜா் ராஜேஷ், சுபேதாா் பவாா், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி தேசிய மாணவா் படை அதிகாரி மேஜா் மா.குமாா் மற்றும் ராணுவப் பயிற்சியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com