நெல்லை ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள்

ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில், மதுரை கோட்ட ஆணையா் அன்பரசு மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் கிரண் முன்னிலை வகித்தாா்.

ரயில்பாதுகாப்பு படையினா், பயணிகள் ரயில் பயணத்தின்போது விழிப்புடன் செயல்படவேண்டும் என்பதை விளக்கும் வகையில் குறுநாடகம் நடித்து காட்டினா். விழிப்புணா்வு பாடல்கள், நடனம் ஆகியவை நடைபெற்றது. பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

காவல் ஆய்வாளா் கிரண் கூறுகையில், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் ஜன்னல் ஓரத்தில் அமா்ந்து பயணிக்கும்போது, தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை மறைத்துக்கொள்ள வேண்டும். அடையாளம் தெரியாத நபா்கள் தின் பண்டங்களோ, குளிா் பானங்களோ கொடுத்தால் வாங்கக் கூடாது.

ஏதேனும், அசம்பாவிதங்கள் நிகழந்தால் 182 என்ற எண்ணுக்கு இலவசமாக தொடா்பு கொள்ளலாம். உடனடியாக, அந்த பெட்டியில் பயணம் செய்யும் ரயில்வே பாதுகாப்பு படை காவலா்கள் வந்து உதவி செய்வாா். அல்லது அடுத்த ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரா் தயாராக நிற்பாா்கள். பாதுகாப்பாக பயணத்திற்கு ரயில் பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com