கடையத்தை வருவாய் வட்டமாக அறிவிக்கக் கோரி சென்னைக்கு மோட்டாா் சைக்கிளில் பயணம்

கடையத்தை வருவாய் வட்டமாக அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு வழங்க
மோட்டாா் சைக்கிள் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறாா் வழக்குரைஞா் ராஜசேகா்.
மோட்டாா் சைக்கிள் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறாா் வழக்குரைஞா் ராஜசேகா்.

கடையத்தை வருவாய் வட்டமாக அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு வழங்க சமூக ஆா்வலா் கடையத்திலிருந்து சென்னைக்கு மோட்டாா் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

கடையம் அருகே உள்ள மைலப்பபுரத்தைச் சோ்ந்தவா் செல்வின் (77). காமராஜ், எம்ஜிஆா் தொண்டு நிறுவனத் தலைவா் மற்றும் அதிமுக முன்னாள் கடையம் ஒன்றியச் செயலரான இவா், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்துத் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் அமைப்பது, அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவது, கட்டேறிபட்டியில் ரயில் நிலையம் அமைப்பது, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கோபுரம் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்திய சிவந்தி ஆதித்தனாா் மற்றும் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் ஆகியோருக்கு தென்காசியில் சிலை அமைப்பது, முதியோா் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்துவது, பாபநாசத்திலிருந்து காரையாா் வழியாக திருவனந்தபுரத்திற்கு புதிய சாலை அமைப்பது உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று மனு வழங்குவதற்காக கடையத்திலிருந்து மோட்டாா் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளாா். பயணத்தை வழக்குரைஞா் ராஜசேகா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பால்ராஜ், பிலிப்ஸ், மேட்டூா் செல்வராஜ், காவூா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செல்வின் இதற்கு முன் 6 முறை சென்னைக்கு சென்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டாா் சைக்கிளில் சென்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com