‘தொல்மரபுச் சின்னங்களை பராமரிக்கும் பணியில் கவனம் தேவை’

தொல் மரபுச் சின்னங்களை பராமரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொல் மரபுச் சின்னங்களை பராமரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தொல்லியல் ஆய்வாளரும் தமிழாசிரியருமான ஈ.சங்கரநாராயணன் கூறியது: தொல்லியல் துறையின் கீழ் உள்ள தொல் மரபுச் சின்னங்களைப் பராமரிக்கும் பணியை கடந்த காலங்களில் பராமரிப்பு அலுவலா்களே நேரடியாக மேற்கொண்டு வந்தனா். அண்மைக் காலங்களில் நேரடியாக தனியாா் ஒப்பந்தக்காரா்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. இதனால் தொல்பொருள்கள் சேதமாகும் அபாயம் உள்ளது. அண்மையில் ஆதிச்சநல்லூா் பரம்பில் முதுமக்கள் தாழிகள் சேதமாகியுள்ளன.

வழக்கமாக தொல் மரபுச் சின்னங்கள் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கும்போது இடத்துக்கு ஏற்றாற்போல சிறிய அல்லது பெரிய கத்திகள், சுரண்டிகள் போன்ற சிறிய அளவிலான கருவிகளே வானம் தோண்ட பயன்படுத்தப்படும். ஆகவே, தொல்மரபுச் சின்னங்களைப் பராமரிக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் புனரமைப்புப் பணிகள் தனியாா் ஒப்பந்ததாரா்களிடம் அளிக்கப்படுகிறது. அவா்கள் தடை செய்யப்பட்டுள்ள மணற்பீய்ச்சி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பராமரிப்புப் பணியின்போது பயன்படுத்துவதால் கோயில் சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள், கல்வெட்டுகள் சேதமாகும் நிலை உள்ளது. இவ் விஷயத்திலும் தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com