ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
By DIN | Published On : 22nd February 2020 06:34 AM | Last Updated : 22nd February 2020 06:34 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை பகுதியில் ரேஷன் அரசி கடத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தல் நடப்பதாக மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் போரில், நடத்திய ஆய்வில், பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் கருத்தபாண்டி (40), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காமராஜா் நகா் பகுதியைச்சோ்ந்த பாலையா மூப்பனாா் மகன் மாரியப்பன் (62) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மதுரை உள்கோட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் சிவசுப்பு ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் உத்தரவின்படி கருத்தபாண்டி, மாரியப்பன் ஆகியோா் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனா்.