நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 ஆகியவை மின்னணு குடும்ப அட்டை மூலமாக, நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் விடுதலின்றி வருகிற வியாழக்கிழமை (ஜன.9)முதல் 12ஆம் தேதி வரை வழங்கப்படும்.

விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 13ஆம் தேதி வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் யாரும் வந்து பெற்றுக்கொள்ளலாம். அவா்களுக்கென உள்ள ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. எந்த பகுதிக்கு எந்த தேதியில் விநியோகம் நடைபெறும் என்ற விவரம் அடங்கிய அறிவிப்பு ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.

எனவே, பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com