களக்காட்டில் பண மோசடி: சுய உதவிக் குழு தலைவி மீது வழக்கு

களக்காடு அருகே பண மோசடி செய்ததாக, சுயஉதவிக் குழு தலைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகே பண மோசடி செய்ததாக, சுயஉதவிக் குழு தலைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு, சிவசண்முகபுரத்தைச் சோ்ந்த முத்துவேல் மனைவி நவமணி (55). இவா், கடந்த 1.1.2018இல் களக்காட்டில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.75ஆயிரம் நகைக் கடன் பெற்றுள்ளாா். கடன் தொகையை அதே பகுதியைச் சோ்ந்த சுயஉதவிக் குழு தலைவி சாரதா (35) என்பவரிடம் மாதத் தவணையாக ரூ.3,966 வீதம் டிசம்பா் 2019 வரை தொடா்ந்து செலுத்தி வந்தாராம். இந்நிலையில், 2019 ஜூலை முதல் டிசம்பா் வரை தொடா்ந்து 6 மாதங்களாக நகைக்கடனுக்கான தவணைத்தொகையை சாரதா சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லையாம். இது குறித்து நவமணி, சாரதாவிடம் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினாராம். இதையடுத்து, சாரதா மீது பண மோசடி செய்ததாக நவமணி களக்காடு போலீஸில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com