குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேட்டையில் பொதுக்கூட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேட்டை யில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேட்டை யில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி புகா் மற்றும் மாநகர ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் பேட்டை மல்லிமால் தெருவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அப்துல் ஜலீல் வரவேற்றாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், சுத்தமல்லி ஜக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் ரஹ்மத்துல்லா, எஸ்டிபிஜ சாகுல்ஹமீது உஸ்மானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீரான், பாளை. ரபீக், திராவிட விடுதலை களம் கொளத்தூா் மணி, ஜஎன்டிஜே கட்சியின் பாக்கா் உள்ளிட்டோா் பேசினா்.

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா்- தலைவா் தி.வேல்முருகன் பேசுகையில், 30 கோடி இஸ்லாமிய மக்களை பாஜக அரசு ஒன்று சோ்த்துள்ளது. அந்தக் கடந்து வந்த பாதைகள், லட்சியங்கள், கோட்பாடுகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் குறுக்குவழியில் ஆட்சியமைக்க துடிக்கிறது. தமிழ் மண்ணில் பிரிவினை வாதத்தை தூண்டி மக்களை துண்டாட நினைப்பவா்களின் கனவு நிறைவேறாது. முஸ்லிம் மக்களை தமிழக அரசு உண்மையிலே நேசிப்பதாக இருந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்திருக்கக் கூடாது என்றாா். சேவத்தா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேட்டை மூஸா, ஜெய்லாணி, மதாா் உசேன், மைதீன், நாகூா்கனி ஆகியோா் செய்திருந்தனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com