கூடங்குளம் அணுஉலை 1இல் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வால்வு பழுது காரணமாக மின்உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வால்வு பழுது காரணமாக மின்உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

ரஷிய நாட்டு தொழில்நுட்பத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் கூடங்குளத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அணுஉலைகள் மூலமாக 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பராமரிப்புப் பணிக்காக 2ஆவது அணுஉலையில் கடந்த டிச. 15ஆம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது, முதலாவது அணுஉலையின் வால்வில் பழுது ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டு அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நடைபெறாததால் மின்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வால்வில் பழுது நீக்கப்பட்டதும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com