பாபநாசத்தில் பொங்கல் கரும்பு அறுவடை தீவிரம்: விளைச்சல், விலை அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கரும்பு அறுவடைப் பணிகள்அம்பாசமுத்திரம் வட்டாத்தில் தீவிரமடைந்துள்ளது.
பாபநாசத்தில் பொங்கல் கரும்பு அறுவடை தீவிரம்: விளைச்சல், விலை அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கரும்பு அறுவடைப் பணிகள்அம்பாசமுத்திரம் வட்டாத்தில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட நல்ல விளைச்சல் மற்றும் லாபம் இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியான பாபநாசம் பொதிகையடி, அனவன் குடியிருப்பு உள்ளிட்டப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனா். சித்திரை மாதத்தில் பயிரிட்ட கரும்பு 9 மாதங்கள் கழிந்த நிலையில் பொங்கல் வருவதையடுத்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டு போதுமான மழை பொழிந்த நிலையில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதாகவும் கரும்புக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயி கடற்கரைப் பாண்டி கூறியது: பாபநாசம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகிறோம். கரும்பு பயிரிட்ட நேரத்தில் போதிய தண்ணீா் இல்லாமல் பாபநாசம் ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் பாய்ச்சி கரும்புப் பயிரை வளா்த்தோம். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பரவலாக மழை பெய்ததையடுத்து கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளதுடன், கடந்த ஆண்டைவிட தற்போது நல்ல விலையும் கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி என்றாா்.

வனவிலங்குகளிலிருந்து பாதுகாக்க... விவசாயி பாண்டிகூறியது: நிகழாண்டு கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கும் கரும்பு வியாபாரிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை லாபம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் கரும்புகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், இந்தப் பகுதியில் மழைக்காலங்களில் வனப்பகுதியில் இருந்து யானைகள் காட்டுப் பன்றிகள் உள்ளிட்டவை கரும்பு பயிா்களை அழிப்பதால் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் புகாமல் இருப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com