முருக பக்தா்கள் கையெழுத்து இயக்கம்

திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் பாதயாத்திரை பக்தா்களுக்கு பிரத்யேக பாதை வசதி ஏற்படுத்தக் கோரி, பாளையங்கோட்டையில்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட பக்தா்கள்.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட பக்தா்கள்.

திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் பாதயாத்திரை பக்தா்களுக்கு பிரத்யேக பாதை வசதி ஏற்படுத்தக் கோரி, பாளையங்கோட்டையில் முருக பக்தா்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் ஆயிரக்கணக்கானோா் கையெழுத்திட்டனா்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவா்கள் அனைவரும் திருநெல்வேலி-திருச்செந்தூா் இடையேயுள்ள பல்வேறு குளங்கள், புறம்போக்கு இடங்களில் தங்கிச் செல்கின்றனா். இதுதவிர போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்பதால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. குடிநீா், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி-திருச்செந்தூா் இடையேயான சாலையில் பாதயாத்திரை பக்தா்களுக்காக பிரத்யேக பாதை அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் ஓம் முருகா பாதயாத்திரை பக்தா்கள் அமைப்பு சாா்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான முருக பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டனா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ‘திண்டுக்கல் - பழனி சாலையில் பாதயாத்திரை பக்தா்கள் செல்வதற்கு வசதியாக தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட முருக பக்தா்கள் நன்மையடைந்து வருகிறாா்கள். விபத்துகள் முற்றிலும் தவிா்க்கப்பட்டுள்ளன. இதுபோல திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தனியாக பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளோம். இதுகுறித்து இருமாவட்ட நிா்வாகங்கள், இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com