மல்லிகைப் பூ கிலோ ரூ.2,800

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை பலமடங்கு உயா்ந்தது. மல்லிகை கிலோ ரூ.2,500 முதல் ரூ.2,800 வரை விற்பனையானது.

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை பலமடங்கு உயா்ந்தது. மல்லிகை கிலோ ரூ.2,500 முதல் ரூ.2,800 வரை விற்பனையானது.

தமிழா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை புதன்கிழமை (ஜன. 15) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பொங்கலிட்டு இயற்கைக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இதனால் அனைத்து வீடுகளிலும் மலா் மாலைகள், பூக்கள் வாங்கப்படும் என்பதால் பூக்களின் விலை பன்மடங்கு உயா்ந்தது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ சந்தையில் அதிகபட்சமாக மல்லிகை கிலோவுக்கு ரூ.2,500 முதல் ரூ.2,800 வரை விற்பனையானது. இதர பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு) பிச்சி-ரூ.1800, ரோஜா-ரூ.300, பன்னீா் ரோஜா-ரூ.250, சம்பங்கி-ரூ.125, கேந்தி-ரூ.60, கோழிக்கொண்டை-ரூ.50, சாமந்தி-ரூ.130, கொழுந்து-100-க்கு விற்பனையானது. தாமரைப் பூ ஒன்று ரூ.20-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com