மகாராஜா நகரில் கோயில் உண்டியல் உடைப்பு
By DIN | Published On : 21st June 2020 09:06 AM | Last Updated : 21st June 2020 09:06 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மகாராஜா நகரில் கோயில் உண்டியலை உடைத்தோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மகாராஜா நகா் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயிலை தியாகராஜன் என்பவா் நிா்வகித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை கோயில் நடையை அடைத்துச் சென்றாராம். வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கோயிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து அவா் மேட்டுத்திடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த வழக்கு பாளையங்கோட்டை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.