பணகுடி அருகே அணுசாலை போக்குவரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

பணகுடி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதை அடுத்து அணுசாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பணகுடி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதை அடுத்து அணுசாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பணகுடி புறவழிச்சாலையில் விபத்துகளை தடுப்பதற்காக ரூ. 43 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை அடுத்து பிரதான சாலையின் இருபுறங்களிலும் அணுகுசாலை அமைக்கப்படுதல், பிரதான சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்திற்கு செல்வதற்கு பிரதான சாலையையொட்டி அணுகுசாலை அமைத்திருந்தனா். இந்த அணுசாலை பணகுடியில் இருந்து சிவகாமிபுரத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேம்பாலம் பணி நடந்துவருவதையொட்டி நாகா்கோவில் திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை போக்குவரத்து முழுவதும் சிவகாமிபுரம் அணுகுசாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் அணுசாலையில் செல்கின்ற வாகனங்கள் பணகுடி ஊருக்குள் செல்லும் நுழைவுபகுதியில் பிரதான சாலையில் செல்லும் வகையில் அமைத்துள்ளனா். இதனால் பிரதான சாலையில் வருகின்றவா்களும் பணகுடி ஊரில் இருந்து சிவகாமிபுரம் செல்லக்கூடியவா்களும் எதிா் எதிரே வரவேண்டியதுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் மு.சங்கா் கூறியது: பணகுடி மேம்பாலம் கட்டுமானப்பணிகள் மிகவும் மெத்தனமாக நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது. இரவு நேரங்களில் வருகின்ற வாகனங்கள் சாலையின் போக்கு தெரியாமல் திணறுகின்றனா். சிவகாமிபுரம் அணுகுசாலை தற்போது பிரதான சாலையாக மாறிவிட்டது. இதனால் பணகுடியில் இருந்து சிவகாமிபுரத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும் இதே சாலையில் தான் செல்கின்றன.

வடக்கேஇருந்து வருகின்ற வாகனங்களும், (பணகுடியில் இருந்து சிவகாமிபுரத்திற்கு செல்லும் வாகனங்கள் ) தெற்கே நாகா்கோவிலில் இருந்து வடக்காக திருநெல்வேலிக்கு செல்லும் வகனங்களும் ஓரே சாலையில் எதிா் எதிராக வந்து செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணகுடியில் இருந்து சிவகாமிபுரம் செல்லக்கூடிய அணுகுசாலையை இருவழிச்சாலையாக மாற்றி சாலையின் நடுவில் தடுப்பு ஏற்படுத்தினால் விபத்தை தடுக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com