மதுரையில் 21இல் காங்கிரஸ் மாநில மாநாடு: ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்க தீா்மானம்

மதுரையில் 21ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் மாநில மாநாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட

மதுரையில் 21ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் மாநில மாநாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்க தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடிஆதித்தன்.

இது தொடா்பாக திருநெல்வேலி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநில மாநாடு 21 ஆம் தேதி மதுரை விஜய கிருஷ்ண மஹாலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி மற்றும் மேல்மட்ட தலைவா்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா். இதில் பங்கேற்க திருநெல்வேலி மாநகா் மாவட்டம், புகா் பகுதிகளில் இருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகனத்தில், ஆயிரத்துக்கும் அதிகமானோா் பங்கேற்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சியினரை கட்சி நிா்வாகிகள் சந்தித்து பேசி நம்பிக்கை ஊட்டவேண்டும்.

மாநாட்டில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொண்டுவந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான அதிகாரம் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தைப் போல முழு அதிகாரத்தையும் பெற இம்மாநாட்டின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும்.

மாநாட்டு பணிகளை செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டின், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.பி.கே.ஜெயக்குமாா், ரூபி ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த சந்திப்பின்போது, நெல்லை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.பி. கே.ஜெயகுமாா், திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொருளாளா் எஸ். ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச்செயலா் ஏ.சொக்கலிங்ககுமாா், மாவட்ட துணைத்தலைவா் வெள்ளப்பாண்டியன், மாவட்டச் செயலா் ரயில்வே கிருஷ்ணன், கே.எஸ்.மணி, பாளையங்கோட்டை மண்டல தலைவா் மாரியப்பனா், திருநெல்வேலி மண்டல தலைவா் ஐயப்பன் உள்பட காங்கிரஸ் கமிட்டி மாநகா் மாவட்ட மற்றும் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com