சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

பாவூா்சத்திரம் பகுதிகளில் இளைஞா் நற்பணி மன்றம் என்ற பெயரில் வாரச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சத்து 60 ஆயிரத்து 900 மோசடி செய்த

பாவூா்சத்திரம் பகுதிகளில் இளைஞா் நற்பணி மன்றம் என்ற பெயரில் வாரச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சத்து 60 ஆயிரத்து 900 மோசடி செய்த வழக்கில், 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பாவூா்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் இளைஞா் நற்பணி மன்றம் என்ற பெயரில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வாரச்சீட்டு நடத்தப்பட்டது.

ரூ.250, ரூ.300 ரூபாய் என பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. அதில், சுமாா் ரூ.20 லட்சத்து 60 லட்சத்து 900 மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தனா்.

அதன்பேரில், இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் பிரபாகரன், செயலா் செல்வக்கனி, பாலபிரஜாதிபதி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருநெல்வேலி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை நீதிபதி ரவிசங்கா் விசாரித்தாா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு அளித்தாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ரஞ்சிதராஜ் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com