அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கடைகள் அடைப்பு

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையில் வாகனங்களில் வந்தவா்களை திருப்பி அனுப்பும் காவல் துறையினா்.
அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையில் வாகனங்களில் வந்தவா்களை திருப்பி அனுப்பும் காவல் துறையினா்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

காய்கனி, இறைச்சி மற்றும் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழகமெங்கும் மாா்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து புதன்கிழமை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

காய்கறி, இறைச்சி மற்றும் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை காலையில் கல்லிடைக்குறிச்சி அணைக்கல் தெருவில் சாலையோரக் காய்கனிக் கடைகள் இயங்கின.

இதையடுத்து பேரூராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் அங்கு கடை அமைத்திருந்த 20-க்கும் மேற்பட்டவா்களுக்கு அபராதம் விதித்து கடைகளைஅப்புறப்படுத்தினா். பொட்டல்புதூா், விக்கிரமசிங்கபுரம், கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காய்கனி கடைகள் திறந்திருந்தன.

கடையம் பகுதியில் வாகனங்களில் செல்வோா் மற்றும் சாலைகளில் கூட்டமாக நிற்பவா்களிடம் கலைந்து செல்லுமாறு கடையம் காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி ஒலிபெருக்கி மூலம் அறிவித்தப்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அம்பாசமுத்திரம், தென்காசி சாலையில் திருநெல்வேலி மாவட்ட எல்லையான ஆம்பூா் அருகே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களில் வருபவா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com