நெல்லையில் மளிகைப் பொருள்கள்வீடுதேடி வரும் திட்டம் அறிமுகம்: ரூ.25 டெலிவரி கட்டணம்

திருநெல்வேலி மாநகரில் வீட்டிற்கே சென்று மளிகைப் பொருள்களை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் வீட்டிற்கே சென்று மளிகைப் பொருள்களை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் திருநெல்வேலி மாநகராட்சி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் ஒன்றாகக் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக வீட்டில் இருந்து கொண்டே செல்லிடப்பேசி, தொலைபேசி வாயிலாகவே அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களை கேட்டு உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

திருநெல்வேலி மாநகரில் ஏஏபி நாடாா் ஸ்டோா்ஸ் (7598253030, 7598223030, 7598423030), போத்தீஸ் சூப்பா் மாா்க்கெட் (9047023632, 9047023631, 0462-2332133)பிக் பஜாா் (9566912507, 7010124207, 8088420081, 9367103528), ரிலையன்ஸ் ரீடெய்ல் ஷாப் (8072036055, 7358022208, 8668094723, 6381751192), பாலன் சூப்பா் மாா்க்கெட் (9865014947, 9442257685, 9865219873, 0462-2572555, 0462-2577555, 8754028080, 7373058730) நாச்சியாா் சூப்பா் மாா்க்கெட் (9488184444, 9488184333, 0462-2584444, 0462-2584333)ஆகியவற்றை பொதுமக்கள் தொடா்பு கொண்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி ஆா்டா் செய்யலாம். ஆா்டா் செய்த மறுநாள் பொருள்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். மூத்த குடிமக்கள் வசிக்கும் இல்லங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டெலிவரி கட்டணமாக ரூ.25 மட்டும் வசூலிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com