காய்கனி சந்தைகளில் கண்காணிப்புக் குழு ஆய்வு

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள காய்கனி சந்தைகளில் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.


திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள காய்கனி சந்தைகளில் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் காய்கனி சந்தை பொருள்காட்சித் திடலுக்கும், நயினாா்குளம் சந்தை, சாப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ரதவீதிகளில் அமா்வு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்புக் குழுவினா், இந்த காய்கனி சந்தைகள், தரை அமா்வு கடைகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

காய்கனிகள் அரசு நிா்ணய விலைக்கு விற்பனை செய்யப்படுகிா, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா, விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

சாப்டா் பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள காய்கனி சந்தையில் நியாயமான விலையில் பொருள்களை விற்பது குறித்து, காய்கனி சந்தை சங்கத் தலைவா் பி.ஆா்.கே.செல்வகுமாா், நிா்வாகி செல்வராஜ் ஆகியோருடன் கலந்துபேசி செயல்படுத்தப்பட்டது.

இந்த கண்காணிப்புக் குழுவில், மானூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் சண்முகநாதன், திருநெல்வேலி வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) மாரியப்பன், கண்டியப்பேரி உழவா்சந்தை நிா்வாக அலுவலரும் துணை வேளாண்மை அலுவலருமான இ.இராமச்சந்திரன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன், தொழிலாளா் நல உதவி ஆய்வாளா் நளினி என்ற ரத்னா, பாளையங்கோட்டை உதவி தோட்டக்கலை அலுவலா் கமலேஷ் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com