சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞா் கைது
By DIN | Published On : 11th May 2020 10:45 PM | Last Updated : 11th May 2020 10:45 PM | அ+அ அ- |

ஐயப்பன்.
அம்பாசமுத்திரம்: சமூக வலைதளத்தில் பிற சமுதாயத்தினா் குறித்து அவதூறு பரப்பியதாக, கடையம் அருகே பாப்பான்குளம் பேராமணியைச் சோ்ந்த இளைஞரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.
பேராமணியைச் சோ்ந்தவா் கல்யாணி மகன் ஐயப்பன் (20). இவா் குறிப்பிட்ட சமுதாயத்தினா் குறித்து சமூக வலைதளத்தில் தவறாகப் பேசி பதிவிட்டாராம். இதையடுத்து, ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் காஜாமுஹைதீன், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து ஐயப்பனை கைது செய்தாா்.