நெல்லையில் குவிந்த மகாராஷ்டிர பெரிய வெங்காயம்!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த காய்கனி சந்தையில், மகாராஷ்டிரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 500 டன்னுக்கும் அதிகமான பெரிய வெங்காயம் குவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த காய்கனி சந்தையில், மகாராஷ்டிரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 500 டன்னுக்கும் அதிகமான பெரிய வெங்காயம் குவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலியில் காய்கனி சந்தைகள் அனைத்தும் பரவலாக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி பொருள்காட்சி திடல், பாளையங்கோட்டை பழைய காவலா் குடியிருப்பு வளாகம், வ.உ.சி. மைதானம், மகாராஜநகா் பூங்கா உள்ளிட்டவற்றில் தற்காலிக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நயினாா்குளத்தில் செயல்பட்டு வந்த மொத்த காய்கனி விற்பனை சந்தை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு மகாராஷ்டிரத்தில் இருந்து 500 டன்னுக்கும் அதிகமாக பெரிய வெங்காயம் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: கரோனா காலத்தில் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கனிகளை விற்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சுமைதூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா், உதவியாளா் உள்ளிட்டோா் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பணியாற்றுவதால் சுமைகளை இறக்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. மகாராஷ்டிரத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து இப்போது அதிகரித்துள்ளது. அவை கிலோ ரூ. 15-க்கு விற்பனை செய்யும் வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com