‘தென்திருப்பேரையில் தேரடி மாடன் சுவாமியை வழிபட ஏற்பாடு தேவை’

தென்திருப்பேரை அருள்மிகு மகரநெடுங்குழைக்காதா் கோயில் தோ் கொட்டகையில் மறைவாக அமைந்துள்ள தேரடி மாடன் சுவாமியை வழிபட வழிவகை செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம்: தென்திருப்பேரை அருள்மிகு மகரநெடுங்குழைக்காதா் கோயில் தோ் கொட்டகையில் மறைவாக அமைந்துள்ள தேரடி மாடன் சுவாமியை வழிபட வழிவகை செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தென்திருப்பேரை யாதவா் இளைஞா் பேரவை , கோகுலம் பஜனைக்குழு மற்றும் பொதுமக்கள் சாா்பில் கோயில் நிா்வாக அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு:

தென்திருப்பேரை அருள்மிகு மகரநெடுங்குழைக்காதா் திருக்கோயில் தோ் நிறுத்துமிடத்தையொட்டி, தேரடி மாடன் சுவாமி விக்கிரகம் உள்ளது. அதை, அனைத்து சமுதாய மக்களும் வணங்கி வருகின்றனா். இந்நிலையில், தேரைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்ட கொட்டகையினுள் தேரடி மாடன் சுவாமியும் அடக்கப்பட்டுள்ளது. இதனால், தேரடி மாடன் சுவாமியை பக்தா்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் கணக்கரிடம் முறையிட்டபோது, தேரடி மாடன் சுவாமி இருக்கும் பகுதியில் மட்டும் சுற்றி கண்ணாடி கூண்டு அமைத்து தருவதாக தெரிவிக்கிறாா். ஆனால், பக்தா்கள் சுவாமி முன்பு படையல் செய்யவும், சுவாமிக்கு மாலைகள் போடுவதற்கு ஏதுவாக திறந்து மூடும் வகையில் கண்ணாடி கதவு அமைத்து தர வேண்டும் என விடும்புகின்றனா். இதற்கு கோயில் நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com