நெல்லையில் குடைபிடித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் கரோனா பொதுமுடக்க காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குடைகளை பிடித்தபடி

திருநெல்வேலியில் கரோனா பொதுமுடக்க காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குடைகளை பிடித்தபடி சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பது, காவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளத்துக்கான அரசாணையை வெளியிடக் கோருவது, தொழிலாளா் நலச் சட்டங்களை வலுவிலக்கச் செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது, பொதுமுடக்கத்தால் வேலையிழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை அறிவிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். அகில இந்திய செயலா் கருமலையான் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு நிா்வாகிகள் பெருமாள், காமராஜ், நிா்வாகிகள் சுடலைராஜ், வரகுணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குடைகளைப் பிடித்தபடி இடைவெளி விட்டு முழக்கங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com