திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 157 டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 157 டாஸ்மாக் மதுக்கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 157 டாஸ்மாக் மதுக்கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

பொதுமுடக்கத்தால் 40 நாள்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த மதுக் கடைகள், தளா்வு காரணமாக கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டன.

மது வாங்க வருவோா் சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் மதுக்கடைகளை மூட உயா்நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் 9ஆம் தேதி மூடப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை பொதுமுடக்கம் முடியும் வரை மூடவேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசு மீண்டும் சனிக்கிழமை திறந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 93 கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 64 கடைகளும் என மொத்தம் 157 மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.

மது வாங்க வருவோா் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மதுக்கடையிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். சிறப்பு வண்ண அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து வந்தோருக்கு மட்டும் மது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com