ஆமதாபாதிலிருந்து சிறப்பு ரயில் இன்று நெல்லை வருகை

குஜராத் மாநிலம் ஆமதாபாதிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை மாலை வருகிறது.

குஜராத் மாநிலம் ஆமதாபாதிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை மாலை வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் வேலை, உணவின்றி தவித்து வருகின்றனா். மேலும், அவா்களை சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் புலம் பெயா்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம், ஆமதாபாதிலிருந்து புலம் பெயா்ந்த சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை (மே 22) மாலை 4 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சோ்கின்றனா்.

நாகா்கோவில் - மும்பை சிறப்பு ரயில்: திருநெல்வேலி, தென்காசி துாத்துக்குடி மாவட்டங்களில் தங்கியுள்ள வெளி மாநிலத் தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட், பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 4ஆவது கட்டமாக நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக மும்பைக்கு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (மே 22) இரவு புறப்படுகிறது. இந்த ரயிலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் தங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பயணம் செய்ய அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com